யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசாமி புவனேஷ்வரி அவர்கள் 14-05-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மருதையினார், செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சுந்தரேஸ்வரி, தனேஸ்வரி, திருச்செல்வன், திருவருட்செல்வன், திருவானந்தசெல்வன், சிவானந்தி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசோதி அவர்களின் ஆருயிர் சகோதரியும்,
காலஞ்சென்ற சசிகாந்தன் மற்றும் சௌந்தரராஜன், உஷா, சிவசக்தி, நிஷாந்தி, ஸ்ரீதனராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம்(ராம்சேது&கோ), துரையப்பா, பொன்னம்மா, கண்மணி, நடராஜா, துரைச்சாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, கந்தையா, சின்னத்துரை, விசாலாட்சி மற்றும் மங்கையற்கரசி ஆகியோரின் பாசமிகு சகலியும்,
காலஞ்சென்ற சாந்தனா மற்றும் வாசன், ஈசன், நாதன், நேசன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
சுஜீவன், மயூரா, ரஜீவன், லக்சிகா, சத்தியமாலா, சிவரமணா, சசிமாலா, பிரஜீவன், நக்கீரன், பிரகலாதன், சாந்தனா, வைஷாலி, வைஷ்ணவி, வைதேகி, கீதன், கீர்த்தி, சாயி, சாய்சன், அதியன், ஆதிரை, சபரீசன், சீனுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிஷான், மித்ரா, கர்ணிஷ், கவிஷ், விதுன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.