
யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, தும்பளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசாமி பாலகிருஷ்ணன் அவர்கள் 06-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இரத்தினசாமி, தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வனிதாமணி அவர்களின் அன்புக் கணவரும்,
தேனாள்(அவுஸ்திரேலியா), புருஷோத்தமன்(அவுஸ்திரேலியா), சிவகீர்த்தனன்(அவுஸ்திரேலியா), கீர்த்தனா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அர்ச்சுனா, சிந்துஜா, தக்சாயணி, சாந்தரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கமலாதேவி, காலஞ்சென்ற அம்பிகாவதி, சரஸ்வதி, பஞ்சலிங்கம், மங்களேஸ்வரி, சற்குணராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அகில், ஆரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, 10-10-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தீர்த்தாங்குள பிள்ளையார் கோவிலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My Dear, Although you can’t be here with me, We’re truly not apart, until the final breath. I take, you’ll be living in my heart.