
திதி:24/02/2025
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் பொற்பதி வீதி, லண்டன், United Arab Emirates Sharjah ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசம்பு சோமசுந்தரம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒளி தரும் சூரியனாக
இருள் அகற்றும் நிலவாக
ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த தெய்வமே
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள்
வாழ்வில் என்றென்றும்
வழிகாட்டியாக இருக்கும்!
உங்களை உருக்கி எமக்காக
உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!
அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்தவரே
நீங்கள் எங்களை பிரிந்து
ஆண்டு ஐந்து சென்றாலும்
உங்கள் இன்முகமும் புன்சிரிப்பும்
எங்கள் மனதை விட்டு அகலவில்லை
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொறு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகிறோம்!
எங்கள் அன்பும் பாசமும் எமது உயிர் உள்ளவரை
உங்களுக்காக!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்!