Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 MAR 1926
இறப்பு 24 FEB 2019
அமரர் சிவசம்பு பத்மநாதன்
இளைப்பாறிய நோய்க்கூற்று ஆய்வாளர்
வயது 92
அமரர் சிவசம்பு பத்மநாதன் 1926 - 2019 ஏழாலை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். ஏழாலையைப் பிறபிப்பிடமாகவும் திருநெல்வேலி, நியூசிலாந்து, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திய கலாநிதி வைத்தியலிங்கம் சிவசம்பு பத்மநாதன் அவர்கள் 24-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு, நாகமுத்து தம்பதிகளின் நான்காவது புதல்வரும், காலஞ்சென்ற நல்லதம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் இரண்டாவது மருமகனும்,

சற்குணவல்லி அவர்களின் அன்புக் கணவரும்,

கலாநிதி உமாகரன்(பேராசிரியர்- டிறினிடாட்), பிரபாகரன்(பொறியியலாளர்- நியூசிலாந்து), அமிழ்தினி(முகாமையாளர்- கனடா), தயாகரன்(திறன் தேர்வுநிபுணர்- நியூசிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரொமீனா(ஆய்வாளர்), மாலதி, சுபதரன்(பொறியியலாளர்), ரூபிகா(கணனிப் பொறியியலாளர்) ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, வடிவேல்(ரயில் திணைக்களம்), புவனேஸ்வரி, மீனாம்பிகை மற்றும் மகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம்(டி.ஆர்.ஓ), சௌந்தரலட்சுமி, திருஞானசெல்வம்(ரயில் திணைக்களம்), கனகசபாபதி(பேராசிரியர்), கணேசன் மற்றும் கலாநிதி குணசிங்கம், அமிர்தவல்லி, விஜயலட்சுமி, வைத்திய கலாநிதி நடேசன்(பல் நிபுணர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வைத்திய கலாநிதிகள் அருணாசலம், இராமநாதன், மனஸா ஆகியோரின் அன்புச் சகலனும்,

சிவை, சஞ்சனி, அரன், சிந்தனா, அநேகா, ஈழனா, ஆரோன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்