யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவசம்பு கிருஷ்ணசாமி அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
பதினைந்தாண்டு நினைவஞ்சலி
அன்புள்ள எங்கள் அப்பா !!!
அப்பா உங்களை போல எந்த உறவும் எங்களுக்கு இல்லை
உங்கள் பாசத்துக்கும் மேல இங்க எதுவும் பெருசு இல்லை
உங்களுடைய முகம் தான் கண்ணுக்குள்ள இருக்கு
உங்களை பத்தி நினைப்பு ,நெஞ்சுக்குள்ள கிடக்கு
நீங்கள் இல்லாமல் நாங்களும் இங்க சந்தோசமா இல்லை
எங்கள் வேதனையை சொன்னா இப்ப கண்ணீர் வரும் மெல்ல
செல்லமா எங்கள் பேர்களை நீங்கள் அழைக்க கேட்குதப்பா....
எங்கிருந்து கூப்பிடுறீர்கள் ?
சுத்தும் முத்தும் பாக்கிறம் அப்பா
நீங்கள் போன காட்சி எல்லாம் எங்கள் கண்ணை விட்டு போகலை அப்பா
ஆண்டுகள் பதினைந்து போன பின்னும் எங்கள் மனசு ஆறலையே
கலங்கும் கண்ணுலதான் தூக்கம் வந்து சேர ரொம்ப நேரம் ஆகுதே !
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்