1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 DEC 1968
இறப்பு 07 MAY 2020
திரு சிவசம்பு அசோகதாசன் (அசோகன்)
வயது 51
திரு சிவசம்பு அசோகதாசன் 1968 - 2020 மடத்தடி, Sri Lanka Sri Lanka
Tribute 33 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி மடத்தடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவசம்பு அசோகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று சென்றதப்பா
ஆண்டவன் திருவடியை நீங்கள் சென்றடைந்து..
ஆறாத துயரத்தை எமக்களித்து,
எமைவிட்டு பிரிந்து ஆண்டு ஒன்று ஆனதப்பா..

காலமெல்லாம் கண்ணை இமைகாப்பது
போல் எமை காத்து,குறையின்றி வாழ துணைநின்று,
கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில்
எமை விட்டு பிரிந்து ஓராண்டு ஓடிமறையுதப்பா..

நாம் மட்டும் என்று எண்ணாமல் உற்றார் உறவினர்
என அனைவரும் நலம் வாழ வழிகாட்டி
அரவணைத்த உங்கள் நல்லுள்ளம் நாமறிவோம்,
எம் உறவெல்லாம் உங்கள் நினைவாலே
வாடுதப்பா கண்களில் நீர் வழிய..என்றும்
எமை விட்டு அழியாத சொத்தாக உங்கள்
நினைவுகள் எம்மோடு கூடி ஓடுதப்பா..

கனவிலும் இழக்க முடியாத உறவு என் உள்ளத்தில்
என்றும் மறையாத உருவமப்பா.
வலியில்லா நினைவாய் வாழ மறுக்கிறது உள்ளம்,
எம்மோடுநீங்கள் இல்லாத வலி
அதுவே மனம் விட்டு மறைந்திடுமோ..
சோகம் எதுவென்று சுமைகள் யாதென்று
அறியவிடாது, எமை தாங்கி நின்ற
என்அன்புத் துணையே, எமை
தவிக்க விட்டு நீ மறைந்து
ஓராண்டு என்ன ஓராயிரம் ஆண்டுகள்
ஆனாலும் எமை விட்டு உங்கள்
நினைவுகள் மறையாது வாழும்.....
ஓம் சாந்தி..

தவிப்புடன் மனைவி பிள்ளைகள்....
தகவல்: மனைவி, பிள்ளைகள்

Summary

Photos