10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கோயில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவராஜா நிசாந் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 10-10-2024
பத்து ஆண்டுகள் ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
வாழ்க்கை என்ற வசந்த காலம்
வரும் போதே எம்மை துடிக்க விட்டு
கணப் பொழுதில் சென்றது ஏன்?
கலைந்து செல்லும் மேகமென
காலங்கள் கடந்து போகின்றனவே
ஆனாலும் உன் நினைவுகள்
புயலென எரிமலையென
கடலலையென எம் மனங்களில்
பொங்கிப்பிரவாகித்துக் கொண்டே இருக்கும்
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
நூறாண்டு போனாலும் உன்
நிலவு முகம் தேயாதடா!
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது.
உன் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம் !!
தகவல்:
குடும்பத்தினர்