யாழ். அல்வாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா மல்லிகாதேவி அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் வீட்டு கதவை சாத்திவிட்டு சொர்க்க கதவை திறந்து கொண்டு நீ மட்டும் சென்று விட்டாய் எங்கள் அனைவரையும் தவிக்க விட்டு.
நாங்கள் பள்ளிக்கூடம் சென்றபோது எங்களிற்கு முன்னால் நீ துயில் எழும்பி எங்களை பள்ளிக்கூடம் அனுப்பி வைத்த எங்கள் அன்னையே இப்போது நீ நிரந்தரமாக துயில் உறங்க சென்றது ஏனொ.
அம்மா என்ற ஒற்றை வார்த்தையை இப்போதும் உச்சரித்து கொண்டே இருக்கின்றோம் ஆனால் அந்த வார்த்தையை கேட்டு ஓடி வர நீதான் இங்கு இல்லை எங்கே சென்றாய்...
அம்மா என்று உன்னை அழைத்து உன்னோடு நிஜத்தில் பேசிய தருணங்கள் அனைத்தும் இப்போது வெறும் நினைவுகளாக போய்விட்டது...
இப்போதும் அம்மா என்று அழைக்கின்றோம் உன்னோடு பேசுவதற்கு பேசுகிறாய் நிஜத்தில் அல்ல நினைவுகளில்...
உன் இரத்தத்தை பாலாக்கி ஊட்டி எங்களை வளர்த்த எங்கள் அன்னையே நாங்கள் செய்யும் அத்தனை குறும்புகளையும் ரசித்து செல்லமாக தண்டித்து நோய் நொடி இன்றி எங்களை பாதுகாத்து வளர்த்து ஆளாக்கினாய் இப்போது பாதியிலே எங்களை தவிக்க விட்டு சென்றது ஏனொ...
தன் ஆசைகளை தனக்குள்ளே மறைத்து விட்டு எங்களின் ஆசைக்காய் ஓடாய் தேய்ந்த எங்கள் குடும்ப விளக்கு இப்போது நிரந்தரமாய் அணைந்து விட்டது.
எப்போது அம்மா வருவாய் விழி நீர் வழிய காத்து கிடக்கின்றோம்....
அம்மா... அம்மா... அம்மா...
அன்னாரின் இழப்பின்போது சொல்வதறியாது நிலை குலைந்து நின்ற எமக்கு நாட்டின் அசாதாரண சூழ்நிலையையும் கருத்தில்கொள்ளாது நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்பு உள்ளங்களுக்கும் இறுதிக்கிரியையில் பங்குபற்றிய நண்பர்கள், உறவினர்களுக்கும் தொலைபேசிமூலம் அழைத்தும் எமது இழப்பை தமது இழப்பாகவும் கருதி முகநூல் மூலம் பிரசுரித்து எல்லோரின் அனுதாபங்களையும் எமக்களித்து உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் இருகரம் கூப்பி கண்ணீர்மல்க எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.