

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், மட்டுவில், மட்டக்களப்பு, கொழும்பு, பிரான்ஸ் Evry ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவராணி தெட்சணாமூர்த்தி அவர்கள் 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கிருபாமூர்த்தி, மற்றும் சிவரோகிணி, சிவராங்கனி, சுவேந்திரமூர்த்தி, சிவரஞ்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜா, பஞ்சலிங்கம் மற்றும் சிவமனி, தேவரானி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கரிகரன், குணசிங்கம், சிறிக்காந்தகுமார், கெளசல்யா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தர்ஷிகன், தர்சனா, அஜினா, சுமிரன், யாகாசினி, சத்தியா, கீர்த்தனா, அஸ்விக்கா, அபிஷன், அக்ஷிக்கா, பிரவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2020 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Repose en paix ???