யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவராஜா சின்னத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:10/09/2023.
மனைவி
நாட்கள், மாதங்கள் உருண்டோடி
எனது ஆருயிர் கணவர்
திரு. சிவராசா அவர்கள் எம்மை
விட்டு பிரிந்து விண்ணுலகை
அடைந்து வருடம் ஒன்றாகி விட்டது.
என் வாழ்நாள் முழுவதும்
கூடவே இருப்பேன் என்று கூறியது
பொய்யாகி போனதே.
உங்களோடு வாழ்ந்த நாட்கள்
திரும்பி வராதா என்று
எண்ணி ஏங்குகின்றேன்.
எனது அன்பு தெய்வம்
என்னை விட்டு சென்ற இடைவெளி
நீண்டு கொண்டே சென்றாலும்
அவரின் நினைவலைகள் என்றுமே
என்னை விட்டு நீங்காது.
அவரது ஆன்மாவும் என்னை விட்டு அகலாது.
உங்கள் ஆசை முகம் என் நெஞ்சில்
என்றும் பதிந்திருக்கும்...!
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
பிள்ளைகள்
அன்போடும் பாசத்தோடும்
அரவணைத்த எங்கள்
அன்புத் தந்தையே!
எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ! இன்று
பிரிவு என்னும் துயரால்
ஓராண்டு ஓடி மறைந்தாலும் எம்
உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!
ஓராண்டு அல்ல எத்தனை ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும் எங்கள்
நெஞ்சிருக்கும் வரை
உங்கள் நினைவிருக்கும் அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...!
Please accept our heartfelt condolences.