
யாழ். இணுவில் கிழக்கு சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா செல்வராணி அவர்கள் 08-06-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா அழகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா சிவராசா(சுவிஸ்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
வேலாயுதபிள்ளை, ஸ்ரீபதி, சிவதேவி, இரஞ்சிதமலர், ஸ்ரீகரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
முகுந்தன்(சுவிஸ்), முகுந்தரூபினி(சுவிஸ்), பென்சிவா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரற்ரியானா, றஜீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரிஷானா, ஷணி, ஐடன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் Weyermannsstrasse 1, 3008 Bern எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.