Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 DEC 1943
இறப்பு 20 MAY 2019
அமரர் சிவராஜா குணரத்னம்மா (அன்னம்)
வயது 75
அமரர் சிவராஜா குணரத்னம்மா 1943 - 2019 சரவணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராஜா குணரத்னம்மா அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு இளைய மருமகளும்,

காலஞ்சென்ற சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ஜமுனா(பிரான்ஸ்), கங்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, ரட்னேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

புஸ்பராணி அவர்களின் உடன்பிறவா சகோதரியும்,

யூட், சுதா, குமாரி ஆகியோரின் அன்பு மாமியும்,

ஜெயபாலன்(லண்டன்) அவர்களின் அன்பு பெரியதாயாரும்,

காலஞ்சென்ற சொர்ணலிங்கம், பாலசுப்பிரமணியம், குணரட்னம்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

கெளசிகா, அணோஜினி, ஜெசிக்கா, கனிமொழி, பிரியங்கா, கயல்விழி, ஆருரன், அருண், மாதவன், மாதங்கி, சரனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனமடுவ மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கெளசி பேத்தி

Photos

No Photos

Notices