5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம் அரசடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆறுமுகம் சிவராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:22/11/2022
உயிரூட்டி வளர்த்தவரை
உயிர் உள்ளவரை மறவோம்!
அன்பைப் பொழிந்து அறிவைத்
தந்து
எம்மை இவ்வுலகில்
பெருமையோடு
வாழ வைத்த
எம் அன்புத் தந்தையே!
அணைக்கின்ற கைகளும்
அழகிய புன்னகையையும்
அன்பை சுமந்த இதயத்தையும்
ஆண்டவன் பறித்தது ஏன்….?
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்
நீங்கள் மறைந்து ஆண்டுகள்
ஐந்து ஆனால் என்ன?
எம்மை விட்டு நினைவுகள் என்றுமே
மறந்து விடப்போவதில்லை!
உங்கள் நினைவுகள் சுமந்து வாழும்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள். பூட்டப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்