யாழ். ஏழாலை தெற்கு விழுசிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் பாலசிங்கம் அவர்கள் 05-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், சுந்தரம் தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
மங்கையற்கரசி, செல்வராணி, காலஞ்சென்ற பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற முத்துச்சுவாமி, நாகராசா, காலஞ்சென்ற தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரஜனி, சிறிரஞ்சிற், காலஞ்சென்ற ஜெயரஞ்சிற், உதயரஞ்சிற், காலஞ்சென்ற தேவரஞ்சிற், சியாமினி, உஷாமினி, ஹரிகரன், தியாபரன், கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2021 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.