 
                     
        யாழ். வேலணை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Baden ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவப்பிரகாசம் காந்தரூபன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. 
பத்தாண்டுகள் கடந்து விட்டதா
நம்பவே முடியவில்லை அப்பா!
ஆண்டுகள் நீளலாம் ஆனால் உங்கள் 
நினைவுகள் நீங்காது...
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா என அழைப்பதற்கு 
நீங்கள் இல்லையே அப்பா!
சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து மொத்தமாய் 
எங்களை மோசம் செய்ததென்ன?
நம் கடமைகள் பல செய்யுமுன்னே 
உன் கடமையை முடித்து விட்டாயே 
அப்பா என்றால் உன் குரல் 
அடுத்த கணம் கேட்டிடுமே 
என்றும் கழங்குகின்றோம் அப்பா 
பதிலேதும் இல்லையே! 
உங்கள் சுமையை நாம் இறக்கமுன் 
எதற்குச் சென்றீர்கள் அப்பா எம்மைவிட்டு 
விரல் பிடித்து நடக்க கற்றுத் தந்தீர் 
விழியோரம் கண்ணீரை ஏன் விட்டுச் சென்றீர் 
உங்கள் திருமுகம் இன்னும் எம்மை விட்டு 
நீங்கவில்லை அப்பா 
நாங்கள் முன்னேற்றப்பாதையில் கால் அடி வைப்பதற்கு 
உங்கள் ஆசிர்வாதம் தான் அப்பா என்றென்றும்... 
உங்கள் ஆத்மா சாந்தியடைய  இறைவனைப் 
பிராத்திக்கின்றோம்!
 
                    