1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சிவப்பிரகாசம் தங்கரத்தினம்
1940 -
2019
தெல்லிப்பழை, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தெல்லிப்பழை மகாதனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவப்பிரகாசம் தங்கரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்தபோது கண்முன்னே
அம்மாவின் பாசநினைவுகள் தான்!
தாங்கிப் பிடிக்கின்றன மனதை!
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகிறேன்
இனிய தாயாக இல்லறத்தில்
வாழ்ந்தீர்கள் அம்மா!
ஆயிரம் நிலவுகள் வாழ்வில்
வந்து மறைந்தாலும் ஒற்றைச் சூரியனாய்
பிரகாசித்தீர்கள் அம்மா!
ஆண்டு ஒன்று சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!
தகவல்:
அரவிந்தன் சிவப்பிரகாசம்- மகன்
Rest in peace