திதி:20/10/2026
யாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், வதிரியை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பெரியதம்பி சிவபாதசுந்தரம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
பத்து ஆண்டுகள் ஓடி
மறைந்தன மூழ்குமா உந்தன்
நினைவுகள் நிழல் தந்து எமை
வளர்த்து நிலைத்து மண்ணில்
வாழ வைத்து உறுதியுடன்
எம்மைக் காத்த எங்கள்
அன்புத் தெய்வமே!
எம் குலவிளக்கு ஒளி விட்டுப்
பிரகாசிக்கும் என நாமிருக்க
ஒளி இழந்து போனதேனோ...?
எங்கள் கனவுகளிலாவது ஒரு
தரம் வந்துவிட்டு சென்று
விடுங்கள் அப்பாவே...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை
வேண்டி நிற்கின்றோம்..!