

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாய்க்கியம் சுப்பிரமணியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் உயிருக்குள் உயிரான தெய்வமே!
என் உலகமே நீ தான் என்றிருந்தேன்
ஏன் இப்படி நடந்தது?
என் நினைவிலும் மறக்கமுடியவில்லை!
அம்மா! உன் இனிமையான நினைவுகளை
நினைக்கும் போது நிலைகுலையச்
செய்யுதம்மா!!
கண்கள் மட்டும் உன்னுருவை
காண்பதற்கு துடிக்கிறது!
காதுகளும் உன் குரலை
கேட்டிடவே விரிகிறது!
சிந்தையிலே உன் நினைவு
சிறகடித்து பறக்கிறது!
எண்ணங்களில் உன் நினைவு
இறுக்கமாக அணைக்கிறது!
அன்பு பாசம் நேசம் பொழிந்து
எங்களை கட்டி அணைத்தாயே!
வாழ வழிகாட்டி வையமெலாம்
புகழ வைத்த தெய்வமே!
பாரில் தவிக்கின்றோம்
பாசத்திற்கு ஏங்குகின்றோம்
அம்மா என்றழைக்கஉள்ளம் துடிக்குதம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..