யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் சின்னத்தம்பி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
உலகில் எத்தனை உறவுகள் இருந்தாலும்
அன்னையின் அன்பை போல்
அளவற்ற அன்பை தரும் உறவு இல்லை!
எங்களைத் தாலாட்டிய கரங்களும்,
எங்களைத் தேற்றிய வார்த்தைகளும்,
எங்கள் மீது பொழிந்த பாசமும்
இன்று நினைவுகளாகிவிட்டதே அம்மா!
நீங்கள் எம்மை விட்டு
தொலைவில் சென்றுவிட்டாலும்,
உங்கள் அன்பு மட்டும்
எங்கள் உயிரோடு கலந்திருக்கிறது!
எங்கள் ஒவ்வொரு மூச்சிலும்
உங்கள் நினைவு நிறைந்திருக்கும்,
எங்கள் ஒவ்வொரு நாளிலும்
உங்கள் அன்பின் தடம் பதிந்திருக்கும்!
மீண்டும் ஒரு பிறவி கிடைத்தால்
மீண்டும் உங்கள் பிள்ளைகளாகி
உங்கள் மடியில் தவழ வேண்டும்
என்ற ஆசை என்றும் எமக்குண்டு அம்மா!
நிலவாக வானில் இருந்தாலும்,
நினைவாக எங்கள் மனதில் இருந்தாலும்,
என்றென்றும் நீங்கள் எங்கள்
அன்பான தாயாகவே இருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.