2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவபாக்கியம் அருளானந்தன்
(சொர்ணம்)
வயது 84
அமரர் சிவபாக்கியம் அருளானந்தன்
1935 -
2020
கட்டுவன், Sri Lanka
Sri Lanka
Tribute
23
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கட்டுவன், இந்தியா சென்னை, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் அருளானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களின் அன்பு அம்மா!
வையத்துள் வாழ்வாங்கு வாழ
வழிகாட்டிய எங்கள் அம்மா!
கனவுகளற்ற நினைவுகளோடு கடக்கின்ற
ஒவ்வொரு நிமிடமும் உம்மை நினைக்க நினைக்க
நெஞ்சம் கனக்கிறது அம்மா!
விழிகள் சொரிகிறது
சொல்ல வார்த்தைகளே
இல்லை
தாங்க முடியாத சோகத்தை
எமக்களித்து
எம்மை விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா!
நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கி
எம்மை நிலை தடுமாற வைத்தீர்கள்!!!
ஆசைகள் காட்டியா எங்களை வளர்த்தீர்கள்
இல்லையே பாசத்தையே
காட்டியெல்லோ எங்களை வளர்த்தீர்கள்!
இனி ஓர் ஜென்மம் இருப்பினும்
நீங்களே
எமக்கு தாயாக வேண்டும் அம்மா!
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest condolences and sympathies to you and your family!