
யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், உடுவில் தெற்கு, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவானந்தன் சறோசினி அவர்கள் 18-03-2019 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சுப்பிரமணியம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவானந்தன்(AT ரவல்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அபிலாசினி(பிரான்ஸ்), துஷாளினி(லண்டன்), அபிலாஸ்(நீர்- மரிஸ்ரெலா கல்லூரி), மனுதர்ஷன்(நீர்- சர்வதேசப் பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரகுபரன்(பிரான்ஸ்), குமரநாத்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கனகரத்தினம்(அதிபர்- புங்குடுதீவு மகாவித்தியாலயம்), தனபாலசிங்கம்(குணம் அன்ட் சன்ஸ்- நெல்லியடி), கமலேஸ்வரி, புஸ்பலதா, கனகாம்பிகை(பிரான்ஸ்), வரதலிங்கம்(லண்டன்), துரைரத்தினம்(அதிபர்- யாழ். சுதுமலை வடக்கு த.க.வி), சுவேந்திரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரிபூராணந்தன், பரிமளகாந்தன்(நோர்வே), செல்வானந்தன்(லண்டன்), ஜெயரூபி(டென்மார்க்), சுந்தரலட்சுமி(சுவிஸ்), தயாளினி(லண்டன்), தவநாயகி(ஆசிரியை), இராசேஸ்வரி, இராசேந்திரம், பாலேந்திரன், ரவீந்திரன்(பிரான்ஸ்), தயாளினி(லண்டன்), நிஷாந்தி(ஆசிரியை- வேம்படி உயர்தரப் பெண்கள் பாடசாலை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோகரஞ்சனி, பாலரஞ்சினி, உமாமகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-03-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்கொழும்பு பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எனது ஆருயிர் நண்பியின் மறைவு கேட்டு இதயம் நொந்து, அவரை பிரிந்த உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்....