யாழ். ஊரெழு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா கற்குழியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவலோகேஸ்வரி காளிதாசா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எட்டு ஆண்டுகள் ஆகியும்
இன்னும் எங்கள் மனதில்
நிலையாய் நினைத்து நிற்கின்ற
உன் நினைவுகளுடன்
கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் என்னை விட்டு
என் கனவை உடைத்துவிட்டாய் மரணத்தால்
அம்மா நீங்கள்
அருகில் இருந்து எம்மை
ஆளாக்கும் நேரத்தில் உங்களை
கயவனவன் கவர்ந்தானே எங்கள்
கனவுகளைக் கலைத்தானே!
தேவதை அம்மாவைத்
தொலைத்து விட்டுத் துடிக்கின்றோம்
என்னபிழை நாம் செய்தோம்
இது தெய்வத்தின் தண்டனையா?
அம்மா!
நிமிடமும் பிரியாமல்
எம்முடன் இருந்தீர்கள் இப்போ
நிரந்தரமாய் பிரிந்து போனால்
எப்படி நாம் தாங்குவோம்?
அருகிலிருந்து ஆறுதல் தர
இன்று இங்கு- நீங்கள் இல்லை
எங்களுக்குத் தேறுதலாய்
இறைவனோடு சேர்ந்து தெய்வமாய்த் துணையிருக்க
தினம் தினம் வேண்டுகின்றோம்.