Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 03 FEB 1949
இறப்பு 02 NOV 2019
அமரர் சிவலிங்கம் தங்கவேலாயுதம்
வயது 70
அமரர் சிவலிங்கம் தங்கவேலாயுதம் 1949 - 2019 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் தங்கவேலாயுதம் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

எங்கள் அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும் அரவணைத்தாய்
அல்லும் பகலும் அயராமல் எமை காத்தாய்!
உலகுக்கு நீ உத்தமனாய் வாழ்ந்து நின்றாய்!

உயிரிலும் உணர்விலும் ஒன்றாக கலந்திருந்தாய்!
உயிர் உள்ள வரை உங்களோடு இருப்பேன் என்றாய்!
ஒன்றுக்கும் கலங்கவில்லை நாம் உன்னோடு இருந்தவரை

உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை

மீண்டும் ஒரு ஜென்மத்தில்
நீங்களே எம் அப்பாவாக வரனும் என்று
தினம் இறை துதி பாடும் பிள்ளைகள்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு,  இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும்,  மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் சிவபதபேறு குறித்த அந்தியேட்டிக் கிரியை 30-11-2019 சனிக்கிழமை அன்று கீரிமலை புண்ணிய தீர்த்தக்கரையில் நடைபெற்றது.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.