

யாழ். வேலணை வடக்கு மணியகாரர் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், இல.49 பிரப்பங்குளம் வீதி(பன்றிக் கோட்டு பிள்ளையார் கோவிலடி) வண்ணார்பண்ணையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 04-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கட்டுவனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இளையதம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஐங்கரன், சுதாகரன், சுதர்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருபாநந்தினி அவர்களின் அன்பு மாமியாரும்,
கியானிக்கா அவர்களின் அன்பு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான யோகம்மா(ஓய்வுநிலை ஆசிரியை), செல்லம்மா மற்றும் மனோன்மணி, அருமைநாயகம்(ஓய்வுநிலை கோட்டக்கல்விப்பணிப்பாளர்), புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான குமாரரத்தினம்(ஓய்வுநிலை ஆசிரியர்), கதிரவேல் மற்றும் குமாரவேல், ரேவதி, மகேந்திரராசா, தவமணி, திரவியம், காலஞ்சென்ற அற்புதம் மற்றும் சிவராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது தற்போதைய இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல.49. பிரப்பங்குளம் வீதி,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details