1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவகுமாரன் சத்தியேந்திரா
1977 -
2025
சித்தன்கேணி, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவகுமாரன் சத்தியேந்திரா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டடு நினைவஞ்சலி 13-11-2026
அன்புடன் எனைத்தேடி
ஓடி வந்த என்னுயிரே
இன்று நானிங்கு வாட
எங்கு நீ சென்றாயோ?
எம்முயிர் சகோதரனே நீ
ஓர் சகோதரி எனைமறந்தும்
இறைவனடி சேர்ந்து இன்று
ஓராண்டாகி விட்டதடா.
வாழ்வின் உண்மை எதுவென்று
இறைவன் வழி நலம் கண்டு
உத்தம பாதை தனைக்கண்டு
உன்னதமாய் நீ சென்றாயோ.
உன் நோய் வாட்டியதை
உனக்குள் நீ புதைத்தாயோ
இயேசு உன்னை அழைத்தார் என்று
ஓடோடிச் சென்றாயோ
அன்புத் தந்தை இங்கிருக்க
அருமைத் தங்கை என அறிந்தும்
உந்தன் பிரிவால் நாம் வாட
ஏன் இந்த நெடுந்தூக்கம்
உன் பிரிவால் நாம் வாட
ஏன் இந்த நெடுந்தூக்கம்
உன் ஆத்மா சாந்தி காண
உளமார வணங்குகின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute