

யாழ். வல்வெட்டித்துறை கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணி பெரியகுளம், கொம்மந்தறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவக்கொழுந்து செல்வமாணிக்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் ஒளி விளக்காய்
குவலயத்தே மிளிர்ந்தீர்கள்
அன்பு அப்பாவே
நீங்கள் எமைப் பிரிந்து
ஆண்டு பத்தாகி விட்டது
ஆயிரம் ஆயிரம் உறவுகள்
இருந்தாலும் அப்பா என்றழைக்க
நீங்கள் இப்பூவுலகில் இல்லை
ஆலமரமாய் நின்று
எம்மை அரவணைத்தீர்கள்
கல்விச் செல்வத்தால் எம்மை
நாடறிய வைத்தீர்கள்
ஆண்டுகள் பத்து கடந்தாலும் எமை
ஆளாக்கிய தந்தையின் பிரிவு
ஆறாது என்றுமே எம் மனதில்
அன்பால் என்றும் எத்தனை மாதம்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!
விவசாயம் செய்து
தன் பிள்ளைகளை வளர்த்து
நன்றாக வாழ்ந்த நற்பண்பாளரே
உங்கள் நினைவுகள்
என்றும் எங்களோடு என்றும் இருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!