15ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவகாமி மகாதேவன்
(ஓய்வுபெற்ற தபால் அதிபர், முன்னாள் அறங்காவலர், சபை உறுப்பினர் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயம்)
வயது 72
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகாமி மகாதேவன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு 15 சென்றாலும் அம்மா!
அன்புருவம் மறைந்து போகுமோ?
ஆண்டவனைக் கண்டதில்லைத் தாயே!
அன்பு முகத்திற் கண்டோம் அவனொளியை!
வேண்டிய தெல்லாம் தந்து வளர்த்த தாயே!
நீங்கள் வாழ்கிறாயே!
உதிரமாக எம் உதிரத்திலே!
மீண்டும் தாயாகப் பிறந்து வாராயோ?
உன்
அன்பு வதனம் பார்த்து நாம் மகிழவேண்டும்
ஆண்டு 15 கடந்தாலென்ன?
கனத்துக்கு கனம் நாமிருப்போம்!
உந்தன் நினைவுகளுடனே!
காயமதை அழித்து நீ கரந்து வாழ்கையில் ஊனக்
கண்முன்னே எம்முன் தோன்றுவாய் நிதமும்...!!!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
சி. மகாதேவன்(அன்புக்கணவர்), சத்தியரூபன்(ஆசை மகன் - கணக்காளர், MSR Group & Ilford Shirdi Sai Temple founder), பாலராஜி(பாசமுள்ள மருமகள்), சிவரூபா(குட்டிச் சிவகாமி - ஆசைப்பேத்தி), சாய்ரூபா - ஆசைப்பேத்தி
May her soul rest in peace under the shadow of Nainai Nagabooshani Amman.... Our prayers with her memories.