மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ் சுழிபுரம், பன்னாலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானவதி ஏரம்பமூர்த்தி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்புடனும் பாசத்துடனும்பாது
காத்த எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ
மென்மையான உள்ளம் கொண்டு
உண்மையான அன்பு தந்து
ஆசையாக எமை வளர்த்து
அறிவூட்டிய அன்பு அன்னையே
நாட்கள் 31 ஆனதம்மா - ஆனால்
உங்கள் நிழல்கள் அழியவில்லை
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
உன்னைப்போல் யாரும் இல்லை அன்னையே
நம் உள்ளத்தின் உள்ளே வாழும்
உன்னதமான அன்னையே - உங்கள்
உடல் மட்டும்தான் பிரிந்து போனது
உயிர் எம்முடன் தான் இருக்கிறது
எத்தனை மாதம் ஆனாலும் உங்கள்
பாசத்திற்கு நாம் பட்ட கடன் தீராதம்மா.
உங்கள் ஆத்மா அமைதிபெற பிரார்த்திக்கின்றோம்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.