Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 FEB 1949
இறப்பு 15 JUN 2020
அமரர் சிவகுருநாதன் இரங்கராஜா
B.A, B.Com, M.Sc- இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் இறுதி பிரதம செயலாளர், பிரிந்த வடக்கு மாகாண சபையின் முதல் பிரதம செயலாளர், வடகிழக்கு மாகாண சபையின் ஆளுநரின் முன்னாள் செயலாளர் மற்றும் வடக்கு மாகாணத்தின் ஆளுநரின் முன்னாள் ஆலோசகர், யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேரவை உறுப்பினர்
வயது 71
அமரர் சிவகுருநாதன் இரங்கராஜா 1949 - 2020 பொன்னாலை, Sri Lanka Sri Lanka
Tribute 45 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் இரங்கராஜா அவர்கள் 15-06-2020 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், பொன்னாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கு.பொ.சிவகுருநாதன்(நாராயணதாசன்) ரோகிணி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற  பொன்னம்பலம், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செம்மனச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,

கு. பொ. சி. வரதராஜா(ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி- யாழ்ப்பாணம்), பாக்கியலட்சுமி, சௌந்தரராஜா(பொறியியலாளர்-பஹ்ரைன்), விஜயலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மாம்பிகை, காலஞ்சென்றவர்களான புலேந்திரன், தர்மகுலசிங்கம் மற்றும் மதிவதனி, காலஞ்சென்ற ஞானசம்பந்தன், நாவுக்கரசன், கலைமகள், ஆரூரன், சுந்தரமூர்த்தி, வாதவூரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், 

அரவிந்தன், அனந்தன், அரங்கன் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

ஜனனி, கஜானி, நளினி, மாலினி, அகிலன், கிரிஷாந்தி, அருணன், அஞ்சனன்(சட்டத்தரணி) ஆகியோரின் ஆருயிர் மாமாவும்,

மதுசூதனன்(பொறியியலாளர்- UK) அவர்களின் பாசமிகு பெரிய தந்தையும்,

சங்கீதா, கௌதமி, அஞ்சலா, கீர்த்தனா, சரண்யா, மானஸா, அச்சுதன், அனிருத்தன், கிருஷ்ணா, ஆதித்யன், அர்ஜுனன், ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று இல. 62, Vivekananda Hill, Colombo 13 எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 10 Jul, 2020