திடீர் மரணம். அந்த இழப்பை ஈடு செய்ய முடியாது. கனக துர்க்கை அம்மன் ஆலயத்திற்கான உங்கள் சேவை மிக அளப்பரியது.எங்கள் தொண்டு ஒருமித்த திசையிலேதான் இரு நேர் கோடுகளைப்போல பய ணமானது.எமது கருத்துகள் சிலசமயம் மாறுபட்டாலும், அதில் அன்பு இருந்தது.நீங்கள் என்னையும், உங்களை யானும் பாராட்டிக் கொண்டோம். அந்த அன்பில் புனிதம் இருந்தது. சட்டுப்புட்டென்று நீங்கள் கதைப்பது ஆரம்பத்தில், என்னால் புரிந்துகொள்ள முடியாதிருந்தது. அதைப்புரிந்துகொண்டபோது, உங்கள் சுபாவம் அதுவென்றும், அதில் எவ்வித களங்கம் இல்லையென்றும் உணர்ந்தேன்.உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்றும் பேசாத உத்தமன் நீங்கள். " நான் " என்ற ஆணவம் உங்களிடமில்லை.நீங்கள் பிறரைத் தள்ளிக்கொண்டு முன்னே சென்றதில்ல்லை.அதில் அடக்கத்தை உங்களிடம் கண்டேன். உங்கள் சமூகப் பணியை ஆலயம் அறியும்.வன்னி மக்களுக்காக,அவர்தம் விடிவுக்காக நீங்கள் செய்த சேவையை எல்லோருமே உணர்வர். சென்று வாருங்கள்.பிறப்பும்,இறப்பும் சுழலும் சக்கரங்கள். ஆத்ம சாந்திக்காக எனது மனைவியும், அடியேனும் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி ! ஓம் நமசிவாய !
Irreparable Loss, Please accept our heartfelt condolence may Prmen’s Soul rest peace in heaven