இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர் அமரர் எஸ். பிரேமச்சந்திரா அவர்களின் மறைவு என்னையும், என் குடும்பத்தாரையும், அவர் அதிகம் நேசித்த மலையக சிறுவர் இல்ல குழந்தைகளையும் சொல்லொண்ணா துயரில் ஆழ்த்தியுள்ளது. அதிகம் பேசாத, சொன்னதை செய்த, நான் என்ற அஹங்காரம் அற்ற, எமது இல்ல சிறுவர்கள் மீது மாத்திரமன்றி உதவி என்று நாடி நின்ற அத்தனை இதயங்களையும் மீதும் பிரேமம் செய்த மாமனிதன். யுத்த பாதிப்புகள், சுனாமி பாதிப்பையும் தாண்டி, மலையத்தில் கடந்த காலங்களில் நடந்தேறிய மீறிய பெத்த முதல் பல்வேறு மண்சரிவுகளின் போதும் அவர்களுக்கு தேவையான உணவு, உடை என அனைத்தையும் சுயமாக வழங்க முன்வந்து எம்மை கருவியாக பயன்படுத்தி துயர்துடைத்த ஓர் யுக புருஷன் நீங்கள் ஐயா. மலையக சிறுவர் இல்லத்தை கைவிடப்பட்ட பல தடவைகள் அரவணைத்த அன்பு தந்தை நீங்கள் ஐயா. சமூகத்தில் ஆதரவற்ற சின்னஞ் சிறுசுகளுக்கு நிரந்தர மாளிகை ஒன்று அமைக்க இடமும் வாங்கி வருடமாச்சி, கட்டடம் கட்ட தொடங்கிடலாம், பணமும் அனுப்புறேன் என இறுதியாக சொன்ன வரிகளும் உங்கள் மகேசன் சேவையையே குறிக்கிறது. இல்ல குழந்தைகளில் திருமணம் முடித்தோருக்கு உதவி, அவர்களின் வாழ்வாதார உதவி, பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவருக்கு உதவி என நீங்கள் ஒவ்வொரு பிள்ளையையும் தனி தனியே கேட்டறிந்து பட்டுபாவாடை போட்டு அழகு பார்த்த தங்கள் மனதையும், அந்த கணங்களையும் மறக்கமுடியாது. குழந்தைகள், குழந்தைகள் என நீங்கள் செய்த சேவைகள் எத்தனை, எத்தனை ஐயா, பெற்றவர் கடமையை எம்மோடு சேர்த்து செய்து முடித்தீர்கள். இலங்கை முழுவதும் எம்முடன் பயணித்தீர்கள் சென்ற இடம் எல்லாம் உங்கள் சேவைகள் பல்வேறு வடிவில் பேசப்பட்டு, பாராட்டப்பட்டது. இதயம் நின்று காலம் உங்களை வென்றாலும், உங்கள் பயணம் மலையக சிறுவர் இல்லம் இருக்கும் வரை தொடரும், உங்கள் சேவைகள் மறையாது. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்ற வள்ளுவன் சொல் பொய்க்காது. ஐயா உங்கள் மறைவினால் வாடும் மனைவி, உற்றார் உறவினருக்கும், இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய அறங்காவலர் சபை உறுப்பினகளுக்கும் எமது ஆழ்த்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம். சாந்தி, சாந்தி, சாந்தி... நன்றி. இங்கனம், கி. காண்டீபன், இயக்குனர், சமூக உதவி ஸ்தாபனம். பதுளை.
Irreparable Loss, Please accept our heartfelt condolence may Prmen’s Soul rest peace in heaven