Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 13 FEB 1948
விண்ணில் 26 NOV 2022
அமரர் சிவகுரு குகதாசன் (பொன்னம்பலம், ஐயா அண்ணை)
வயது 74
அமரர் சிவகுரு குகதாசன் 1948 - 2022 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மல்லாவி, நோர்வே Molde, Linderud Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவகுரு குகதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 15-12-2023

அப்பா!
அன்புக்கு உருவம் நீங்களப்பா!
எங்களை விட்டு நீங்கள் எங்கு தான்
சென்றீர்களோ?

ஆண்டு ஒன்று ஆகிவிட்டதப்பா
உங்கள் அன்பு முகம் பாராமல்
நாங்கள் கலங்கித் தவிக்கின்றோம்!

ஆலவிருட்சம் போல் கிளைகளைப் பரப்பி
எங்களை எல்லாம் தாங்கி நின்றவரே!

இன்று நீங்கள் இல்லாமல்
தனியாய் தவிக்கின்றோம்
நாம் வாழும் காலம் வரை
உங்கள் நினைவுகளும் எங்கள்
உள்ளத்தில் வற்றாத
 ஊற்றாகப் பொங்கிப் பெருகும்!

உங்கள் வாழ்வின் சிறப்புகளை
எங்கள் மனதில் நிலை நிறுத்தி
உலகம் உங்களைப் போற்றும்படியாக
நாங்கள் மண்ணில் வாழ்வோம்!

உங்கள் ஆத்ம சாந்திக்காய்
உளமுருகி இறைவனிடம் வேண்டுகிறோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 27 Nov, 2022
நன்றி நவிலல் Sun, 25 Dec, 2022