அமரர் சிவகுரு புவனேந்திரன்
டிஸ்னி உணவக உரிமையாளர்
வயது 73
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
We are honored and blessed to have known this beautiful condolences.
அன்புள்ளம் கொண்ட பண்பாளர் அமரர் சிவகுரு புவனேந்திரன் அவர்கள் தமது பூவுலக வாழ்வை முடித்துக் கொண்டு அமரராகி விட்ட தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.
தாயகத்தில் ஊடகவியலாளராகவும் பணியாற்றிய அமரர் இந்திரன் அவர்கள் பாரிஸில் நேரில் சந்திக்கும் நேரத்தில் எல்லாம் அவரது பேச்சுக்கு மத்தியில் தாயகத்தின் அரசியல் விவகாரம் நிச்சயம் இருக்கும். அன்னாரின் அரசியல் அறிவு குறித்து நான் பல தடவைகள் வியந்திருக்கிறேன்.
அவருக்கும் எனக்கும் ஒரே வயதாக இருந்தாலும் சந்திக்கும் நேரத்தில் எல்லாம் "அண்ணா எப்படி இருக்கிறீர்கள்? என்று அழைத்துத்தான் என்னிடம் சுகம் விசாரிப்பார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கும் அதே வேளை அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள் உட்பட்ட சகல குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்!
Write Tribute
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கும் அதே வேளை அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.