மட்டக்களப்பு கல்லடி உப்போடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானசௌந்தரி சங்காரவேல் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேசம் மரிக்கவில்லை நினைவுகள்
கலையவில்லை!
எம் அழியாச் சொத்து
அலைமோதிப் போனதனால்
உற்ற
துணையிழந்து உருகி மடிகின்றோம்!
நிழற்குடையாய் எம்மை நித்தமும்
காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல்
கேட்க
காரணம் தெரியவில்லை
நேசத்துக்கு என எங்களைப் பெற்றெடுத்து
ஆளாக்கி பேணிக்காத்து பெருவாழ்வு
எமக்களித்த எம் தாயே..!
நின்
திருமுகம் கண்டு ஆண்டு ஐந்து ஆனதோ !
உம் நினைவு எம்மை வாட்டுதம்மா
நீங்காத
உங்கள் நினைவில்
நித்தமும் நாம் வாழ்கின்றோம்
என்றென்றும் எழிலோடு
எம் நெஞ்சிலெ நீ வாழ்வாய் !
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.