

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவகாமியம்மா சந்திரசேகர ஐயர் அவர்கள் 12-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையர், சொர்ணாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், வைத்தீஸ்வரகுருக்கள் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சந்திரசேகர ஐயர் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
வைத்தியநாத ஐயர், காலஞ்சென்றவர்களான ரகுநாத ஐயர், சண்முகநாத ஐயர் மற்றும் ரவீந்திரநாத ஐயர், சந்திரவதனி, மங்களேஸ்வரி, ஜெகநாத ஐயர், மதிவதனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கங்கா, பவானியம்மா, ஞானசேகரகுருக்கள் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அமுதாம்பிகை, ஜெயஸ்ரீ, இராஜேந்திரகுருக்கள், சந்திரமோகன், ஜானகி, சுசீந்திரகுமாரகுருக்கள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கார்த்திகா, பிருந்திகா, பிரியஸ்தா, சரவணன், யாதவ், கிஷாந்த், சந்தியா, ஷாநித்யா, ஷகிந்தன், துஸ்யந்தி, தாரணி, ஹம்சாநந்தினி, ஜனனி, ஜனகன், தக்சாயினி, சுபாங்கினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடையவும் அவர் பிரிவால் துயருறும் அனைவரும் அமைதி பெறவும் எம்பெருமான் திருவருள் துணை செய்ய பிரார்த்திக்கின்றேன். விஜயராஜா கௌரீஸ்வரன். Dortmund.