5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவகாமி நடராஜா
வயது 74
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
வவுனியா வைரவபுளியங்குளம் வைரவகோயில் வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா நொச்சிமோட்டை, பிரித்தானியா Surbiton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவகாமி நடராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா உங்கள் குரல் கேட்காது
ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன
அரவணைத்த உங்கள் பாசக் கைகள் எங்கே!!
அள்ளித் தந்த அந்த அமிர்த சுவைகள் எங்கே
முத்தமிட்ட உங்கள் மூச்சு எங்கே
முடிச்சு வைத்த பாசக் கதைகள் எங்கே
அம்மா நாம் கண் திறந்த போது உங்கள்
திருமுகத்தை கண்டு சிரித்தோம் அன்று
உங்கள் கண்கள் திறக்க மறுத்த போது
எங்கள் வாழ்க்கையும் இருண்டு விட்டதம்மா
அம்மா அம்மா என்று அழைக்கின்றோம்
ஆதரிக்க யாருமில்லை
ஆண்டு பல உருண்டு சென்றாலும்
உங்களை எங்கள் உயிர் உள்ளவரை
தெய்வமாக பூசிப்போம்.!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்