Clicky

அன்னை மடியில் 24 FEB 1969
ஆண்டவன் அடியில் 06 APR 2022
அமரர் சிவதேவி சந்திரசேகரன்
வயது 53
அமரர் சிவதேவி சந்திரசேகரன் 1969 - 2022 சுதுமலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Selvi - Canada (Sinnakutty) 416-457-7252 17 APR 2022 Canada

சிந்தைகொள் சிவா! சிவபதம் சீக்கிரம் நீ அடைந்ததென்ன? காலம் எமை பிரித்ததென்ன? காலனுனை அழைத்ததென்ன? சிரித்து நாம் வாழ்ந்த நாட்கள் சிதறுண்டு போனதேனோ? சிட்டு நீ பறந்ததேனோ? பாவி நீயல்ல நாமடி பரிதவித்து நிற்கின்றோம் காட்சி இங்கு விரியுதடி …… கரம்பற்றி நாமிருவர் வரப்பு மேல்நடந்தும் அமைதிப்படை வந்தபோது அஞ்சி அஞ்சி நடந்ததும், தோளோடு தோளுரச ஓராயிரம் கதைத்ததும் கண்ணீரில், கரையுதடி எம் கடந்தகாலம் இங்கு ஒரு வார்தை பேச வேண்டும் தாயே நீ எழுந்துவாடி! நீர் மூவர் நாம் மூவரில்லையடி நாம் அறுவர் ஆனோம் அன்று நமக்குள் பேதம் இல்லையடி மீண்டும் அந்த நாட்களுக்காய், ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன் மீண்டும் ஒருமுறை வாழவேண்டும் என் உயிரே எழுந்துவடி சிந்தித்து சிந்தித்து இதயம் இங்கு சிதறுதம்மா உதிரம் ஆறாய் பாயுதம்மா உள்ளம் உடைந்து வீழுதம்மா மண்டையோடும் வலிக்குதம்மா மீளாத்துயர் தந்ததேன்மா? ஒருமுறை உனை காண வேண்டும் கொரோணா இங்கு தடுக்குதம்மா

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 15 Apr, 2022