10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவபாதசுந்தரம் முகுந்தன்
வயது 33

அமரர் சிவபாதசுந்தரம் முகுந்தன்
1980 -
2014
கரணவாய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரணவாய் தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, வெலிக்கடை மகசீன்சிறைச்சாலை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாதசுந்தரம் முகுந்தன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
உள்ளம் வெந்து துடித்து
உரக்கக் கத்துகிறோம்..
உத்தமனே உன் பிரிவு
உயிருள்ளவரை உறங்காதய்யா..
மண்ணுலகிற்கு நீ பிறந்தது..
மாபெரும் புண்ணியமாய்..
எண்ணிய எம் நெஞ்சமெல்லாம்..
கண்ணிமைக்கும் நேரத்தில்..
கண்ணூறாய் போனதென்ன..?
அன்பாக நீ பேசிய வார்த்தைகளெல்லாம்..
காற்றோடு கலைந்து கற்பூரமாகியதே..
பண்போடு நீ வளர்ந்ததனால்..
பாதியிலே வாழ்க்கை பரிதவித்துப் போனதுவோ..
திரும்பிய பக்கமெல்லாம்..
உன் திருவுருவம் கண்ணுக்குள் நிறைக்குதய்யா..
தகவல்:
குடும்பத்தினர்