யாழ். கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், பிரித்தான்யா Liverpool ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாலன் குணபாலன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பிற்கு இலக்கணமாய்
அவனியில் வாழ்ந்து
பண்புடைமை காத்து
பக்குவமாய் வழி நடந்தீர்
இரக்கத்தின் இருப்பிடமாய்
ஈகை பல செய்து எல்லோருக்கும்
நல்லவராய் நாணயமாய் நடந்தீர்
ஏனோ இறைவன் இடை நடுவில்
பறித்து விட்டான்..
துன்புற்றோர் துயர் துடைத்து
துணைக்கரமாய் அடைக்கலம்
தந்த உம்மை
ஆண்டவன் ஏனழைத்தான்
பண்புள்ளோரை பல காலம்
வாழவிடக் கூடாதென்றோ?
என் செய்வோம்
இறைவன் சித்தம் இது
இனி காணமுடியாத சோகநிலையோடு
இங்கிருந்தே ஏங்கியழுகிறோம்.
நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நாமிருந்தோம்
காற்றொன்று வீசியதாய்
நினைவிருக்கிறது
நீ கலைந்துபோன கணம் மட்டும்
நினைவில் இல்லையப்பா..!
உயிர் உருக்கும் அந்த கணப்பொழுதை
நினைக்க மனம் மறுக்குதப்பா
நீ இருந்த இடமெல்லாம்
நீ நடந்த சாலைகள் எல்லாம்
உன்னை நினைவு படுத்தும்
நிமிடங்களில் நதிகளும் தோற்கின்றன
எங்கள் கண்களின் முன்னால்
காற்றோடு போனவரே வா
காலன் வரும் நேரம்
இதுவென்று நீ உரைத்திருந்தால்
காத்திருப்போம்..
மீட்டும் விரல்களை
தொலைத்த வீணைகளாய் நாமிங்கு..
கார் இருளில் கலைந்தவரே..!
நீ எங்கே?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
பிரிவால் துயருறும்
மனைவி,பிள்ளைகள்(அஜிந்த்,சஜிந்த்) மற்றும்
உற்றார் உறவினர்கள் , நண்பர்கள்..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.