1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிற்றம்பலம் சின்னம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா என்ற சொல்லின் சூட்சுமம் நீ
குடும்பத் தலைவியாய் எங்கள் வழிகாட்டியாய்
நீ இருந்தாய் அம்மா!
நாங்கள் எங்கே எப்படி வாழ்ந்தாலும்- நீயே
எங்கள் வாழ்வின் ஒளி விளக்கு!
பாசத்தின் உறைவிடம் அம்மா நீ நல்ல நேசத்தின்
இருப்பிடமும் நீ கருணையின் பிறப்பிடம் நீ
எம்மை அன்பாய் ஆட்சி செய்தவள் நீ
ஓராண்டு ஓடி ஒழிந்தது அம்மா
நித்தமும் உம் நினைவுகள் எம் மனதில் அம்மா
ஆறுதல் கூற ஆயிரம் வார்த்தைகள் இருந்தும் என்ன அம்மா
பரிவுடன் நீ காட்டிய அன்பினை இனி எவர்தான்
எமக்கு கொடுப்பார் அம்மா.
உம் ஆத்மா சாந்தியடைய எம்மை என்றும் வழிநடத்த
அனுதினமும் இறையருள் வேண்டுகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute