Clicky

Born 16 AUG 1951
Rest 25 SEP 2023
Dr Sittambalam Rajasundaram
Retired General Practitioner
Age 72
Dr Sittambalam Rajasundaram 1951 - 2023 Colombo, Sri Lanka Sri Lanka

Tribute

தமபி ராமர் குடும்பம், மூளாய் 28 SEP 2023 Sri Lanka

வைத்தியர் சிற்றம்பலம் ராஜசுந்தரம் அவர்களின் தந்தையைப்போல மென்மையாக பேசும் மிகவும் இனிமையான மனிதர். அன்னார் யாழ்ப்பாணத்தை பூர்வீகக் குடியாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்து கொழும்பில் றோயல் கல்லூரியில் கற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் வைத்தியராக சித்திபெற்று லண்டனின் ஒரு குடும்ப வைத்தியராகத் தொழிலை ஆரம்பித்து வைத்தியத் துறையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், முழுமையாக தனது இனத்திற்காகவும், சமயத்திற்காகவும் இணைத்து பல சேவைகளை இறுதிவரை செய்தார். இலங்கையில் ஆற்றிய பணிகள் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கும், மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயதிருபணிக்கும், மற்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் என்பன அடங்கலாகும். மூளாய் கூட்டுறவு மருத்துவமனையை பழைய நிலைக்கு கொண்டு வந்து, அதனை புதுப்பித்து நவீனமயமாக்கும் அன்னார் குடும்ப முயற்சிக்கு அவர் தலைமை தாங்கினார் என்பதையும் ஊரார் நன்கு அறிவார்கள். எதுவித பிரதியுபகாரமும் பாராமல் வழங்கியமை அவரின் கொடை செய்யும் பண்பை என்னவென்று சொல்வது. அன்னாரின் குடும்பத்தாருக்கு, எங்கள் குடும்பத்தார் அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா இறைபாதங்கள் சென்றடைய வேண்டிநிற்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! தம்பையா இராமச்சந்திரன் குடும்பம், மூளாய், ஸ்ரீ லங்கா +94776110763

Notices

Obituary Tue, 26 Sep, 2023
31st Day Remembrance & Thankyou Message Tue, 24 Oct, 2023
1st Year Remembrance Tue, 24 Sep, 2024