யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரப்பிள்ளை செல்வரத்தினம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
2000 ஆம் ஆண்டில் உலகம் அழியும் என கூறியவர் பலர்,
உங்கள் திடீர் மறைவினால் அழிந்ததே
என் பாதி உலகம் அப்பா
20 ஆண்டுகள் ஆனாலும் உங்கள் இறுதி மூச்சின்
சூட்டினை இன்றுவரை உணருகிறேன்
அப்பா!
உங்கள் எதிர்பாரா மறைவினை
தொடர்ந்து பல போராட்டங்கள்
பல சவால்கள் அப்பா
இவை அனைத்தையும் உங்களின்
அறிவுரைகளுடனும் பல உற்றார், உறவினர்
நண்பர்களின் ஆதரவுடனும் தாண்டி வந்தேன்
அப்பா
இன்று கணவராய், தந்தையாய் நான் வாழும்
இனிமையான வாழ்வை பார்த்து மகிழ
நீங்கள் எங்கள் அருகில் இல்லையே அப்பா
உங்கள் அன்பும் அரவணைப்பும்
என்றும் என்னுள் வாழும் அப்பா
என்றும் உங்கள் ஆசியினை வேண்டுகிறோம்
அப்பா!!!
மகன் - ரமணராஜா, மருமகள்- றாஜாந்தி,
பேரப்பிள்ளைகள்- அஸ்வினி, அனுசியா