கிளிநொச்சி வட்டக்கச்சி சில்வா வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா நொச்சிமோட்டையை வதிவிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரபிள்ளை பாஸ்கரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
உங்கள் அன்பொழுகும் தங்க முகம் மறந்தோமில்லை
இன்றும் உங்கள் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
என் அன்பிற்கும் ஆசைக்கும் உரியவரே
கடைசிவரை காக்காது சடுதியில் சென்றதேன்!!
கலங்கி நிற்கின்றேன், கதறி அழுகின்றேன்
கனவாகி போகாதோவென்று கடவுளை வேண்டி!!
எங்கு சென்றீர்கள் எனை விட்டு!
எல்லாமே இழந்தது போல் என் மனம் தவிக்கிறதே!
நித்தம் கண்ணீர் வடிகிறது!
கண்மூடித் திறக்கும் நேரத்தில் எங்களைத் தவிக்கவிட்டு
நிரந்தரமாக பிரிந்தீர்களே அப்பா
உங்களுக்கு நிகர் எங்களுக்கு யார் அப்பா?
எங்கு பார்த்தாலும் உங்கள் முகம் தான் தெரிகிறது!
பாசமாய் பண்புடன் வளர்த்த
பேரப்பிள்ளைகளும் உங்களை இழந்து
தவிக்கின்றனர் தினந்தோறும்!
அளவில்லா அன்பையும் அளக்க
முடியாத பாசத்தையும் அளவில்லாமல்
கொடுத்து விட்டு எங்கு தான் சென்றீரோ?
நீங்கள் இல்லாத இந்த உலகம் எங்களுக்கு
இனி வெறும் பாழடைந்த மண்டபம்தான்
உங்களை இழந்து உயிர்வாழும் நாங்களும்
இனி உணர்வற்ற வெறும் நடைப்பிணங்கள் தான்
உங்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கிறோம்.
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
rest in peace loving mama and thaththa we miss you talking about since you left us none stop always in our heart forever niranjan bamini family uk