Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 MAR 1955
இறப்பு 16 NOV 2021
அமரர் சிதம்பரநாதர் சச்சிதானந்தன்
ஓய்வுநிலை கிராமசேவகர்
வயது 66
அமரர் சிதம்பரநாதர் சச்சிதானந்தன் 1955 - 2021 வரணி, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வரணி மாசேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரநாதர் சச்சிதானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

முதலாம் ஆண்டு நினைவு
 நாள் வந்ததோ? ஒவ்வொரு
 நிமிடமும் உம் நினைவுதான் அப்பா!
 ஆயிரம் உறவுகள் இருந்தாலும்- அப்பா
 என அழைப்பதற்கு நீங்கள்
 இல்லையே அப்பா!

நாம் மகிழ்ச்சியாக இருக்க
 நம்மிடம் ஆயிரம் விடியல்கள்
இருந்தாலும் சோகத்தை பகிர
 ஒரு நல்ல துணையாக இறைவன்
 நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!

புன்னகை புரியும் உம் முகம் தெரிகிறது
 தினமும் ஆனாலும் அது
 உண்மை இல்லை என்று நினைத்தவுடன்
 எம் மனம் கலங்குகிறது!

உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உம் நினைவுகள்- எம்
 உள்ளத்தில் என்றென்றும்
 உறைந்திருக்கும் அப்பா!

மனைவி மனம் பரிதவிக்க
பிள்ளைகள் சோர்ந்து நிற்க
மருமக்கள் உறைந்து நிற்க
எங்களை மறந்து எங்கே போனாய்?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: மருமக்கள் மற்றும் குடும்பத்தினர்