வவுனியாவைப் பிறப்பிடமாகவும், புதுமாத்தளனை வதிவிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரப்பிள்ளை வரதராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலச்சக்கரம் வேகவேகமாய் சென்றிடினும்
ஞாலம் உள்ளவரை நினைவுகள் அகலாது
அன்போடு அறிவினையும் நெஞ்சோடு கலந்து
அகிலம் போற்ற எம்மை ஆளாக்கி விட்டீர்கள்
கண்ணின் மணிபோல் எமை காத்து
கடமை வீரனாய் சேவையாற்றி
எண்ணம்போல் வாழவைத்தபின்
மண்ணகம் நீங்கி சென்றதேன் அப்பா
உயிர் கொடுத்து உலகறிய வைத்தவரே
உயர்வு பெற்று நாம் வாழ நீங்களில்லை
நினைவுகளை நீக்கமற நெஞ்சிருந்தி
நித்தமும் வேதனையில் வெந்து தணிகின்றோம்
எம் மண்ணிற்கும் மக்களுக்கும்
ஆற்றிய உங்கள் மகத்தான பணியினை
யார்தான் மறந்திடுவார்?- இன்றும்
உங்களை எண்ணி வியக்கின்றனர் பலர்
பத்து வருடங்கள் பறந்தோடி சென்றிடினும்
கத்து கடல்சூழ கடல் கடந்து வந்தாலும்
எத்தனையோ உறவுகள் கூடி நின்றாலும்- எம்
சொத்தாக நினைப்பது நீங்கள்தான் அப்பா
என்றும் உங்கள் நினைவுகளுடன்
மனைவி, பிள்ளைகள்.
10 years has passed and yet I can’t get over the pain of losing you.Rest in peace.