Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 24 JUL 1937
விண்ணில் 21 NOV 2020
அமரர் சிதம்பரன் கிருஸ்ணபிள்ளை
ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர்- தேர்தல் திணைக்களம் சமாதான நீதவான்
வயது 83
அமரர் சிதம்பரன் கிருஸ்ணபிள்ளை 1937 - 2020 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரன் கிருஸ்ணபிள்ளை அவர்கள் 21-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னதம்பி இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாசிலாமணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுமதி(முகாமைத்துவ உத்தியோகத்தர் கட்டிடத்திணைக்களம் வடமாகாணம்), வாசுகி(ஆசிரியை- ஆவரங்கால் நடராசா இராமலிங்கம் வித்தியாலயம்), முகுந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

நற்குணராசா(யா/சென் ஜோன்ஸ் கல்லூரி), மனோரஞ்சிதன்(விரிவுரையாளர்- யாழ் கல்வியியற் கல்லூரி, கோப்பாய்), அனுசியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஐந்தூரியா, ராகுல், சங்கவி, துளசிராம், மானுஷா, மானஷி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் கரதடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: இந்திரா கந்தசாமி(மைத்துனி)