யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கொழும்பு, கனடா Brampton ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
குடும்பத்தின் குலதெய்வமே
பாசத்தின் உறைவிடமே அப்பா!
நீங்கள் எம்மை விட்டுப் போய்
நாட்கள் 31 ஆனதே
வரமாக எமக்கு கிடைத்த ஐயாவே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில் நனைத்துக்கொண்டே இருக்கும்
31 நாட்கள் உருண்டு ஓடினாலும்
அப்பா! உங்கள் நினைவுகள் எம்மை
விட்டு அகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Lots of memories flood my mind. I cannot just forget your irreplaceable broad smile, your love, and hug, my dear bro-in-law. Rest in Peace. Please accept our deepest condolences.