Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 SEP 1928
இறப்பு 21 APR 2025
அருட்சகோதரி புஸ்பம் ஞானப்பிரகாசம்
வயது 96
அருட்சகோதரி புஸ்பம் ஞானப்பிரகாசம் 1928 - 2025 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அருட்சகோதரி புஸ்பம் ஞானப்பிரகாசம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நெடுந்தீவு ஈன்றெடுத்த நறுமண மலரே - இறை
அடிதனில் கலந்திட்ட ஆன்மீகச் சுடரே!
ஞானப் பிரகாசம் - விக்டோரியா வழிவந்த
புனித குடும்பத்தின் புண்ணியப் புதல்வியே!

ஆசிரியப் பணியினில் அறிவொளி ஏற்றி
அருட்பணி வழியினில் இறையருள் ஊட்டி
மாநிலத் தலைவியாய் யாழ்மண் உயர்த்தி
உரோமை நகர்வரை உயர்ந்து நின்றீர்!

இந்திய மண்ணினில் கன்னியர் உருவாக்கி
ஏழையர் வாழ்வினில் ஒளியினை ஏற்றி
தளர்ந்த உடலிலும் பிறர்நலம் வேண்டி
தவமாய் வாழ்ந்த தியாகச் செம்மலே!

திருத்தந்தை தானும் விண்ணகம் சென்ற
அத்திரு நாளில் இறைவன்பால் இணைந்தீர்!
மன்னார் ஆயர் தம்பியுடன் சேர்ந்து
விண்ணகக் கூட்டில் துதிக்கின்றீர் போலும்!

ஓராண்டு ஓடினும் உம் திருநாமம்
பார்போற்றும் பணிகளால் நிலைத்திருக்கும்!
இறைவனின் நித்திய இளைப்பாற்றி உமக்கு
என்றும் கிடைக்கவே இறைவனைப் பணிகின்றோம்!

தகவல்: பாலசிங்கம் தவபாலன்(மருமகன்)

தொடர்புகளுக்கு

பாலசிங்கம் தவபாலன் - மருமகன்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 24 Apr, 2025