யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிசிலியா பெனடிக்ற் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
என் உயிரே ஏன் எம்மை விட்டுப் பிரிந்தீர்
ஆனந்தம் என் அம்மா உயிருடன் இருந்திருந்தால்
துக்கம் வந்ததே நீவிர் மீளாத் துக்கம் கொண்டதால்
மார்க்கம் தெரியவில்லை எங்கு சென்று ஆறுவதென்று
நான் கலங்கவுமில்லை மனம் சோரவுமில்ல்லை
என் அம்மா
எம்முடன் வாழும் பொழுதினிலே
நாளும் பொழுதினிலே உம் நினைவே
கனவிலும் அடிக்கடி வருகின்றீர்கள் அம்மா
என் வாழ்க்கையில் இனி சோகம்தான் நிரந்தரமன்றோ
உங்கள் பிரிவால் எங்களை ஏங்கவைத்து
நிரந்தரத்
தூக்கத்தை அணைத்துக் கொண்டதேனம்மா
காலங்கள் கரைந்தால் மறந்திடலாமென்று
அம்மா
ஒரு வார்த்தைக்குச் சொல்லலாமம்மா
காலன் உமை எங்களிடமிருந்து
நிரந்தரமாகப் பிரித்து விட்டான்
எம் நெஞ்சங்கள் நிஜமாக
ஜீரணிக்க முடியவில்லை
நீங்கள் மறந்தாலும் எம்
நெஞ்சங்கள் மறக்காது தாயே
நீங்கள் எம் உயிர்நாடி அல்லவா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் ஓடோடி
ஆண்டவன் திருப்பாதத்தில்
பல கோடி வேண்டுகின்றேன்.