
-
29 NOV 1926 - 31 JUL 2014 (87 வயது)
-
பிறந்த இடம் : ஊரெழு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Scarborough, Canada
திதி:09/08/2024
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிந்தாமணி திருநாவுக்கரசு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
அம்மா பத்து ஆண்டுகள்
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!
எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள்
எல்லாம் பொற் காலங்கள் தான்!
அம்மா உங்களது அன்பான அரவணைப்பு,
இனிமையான பேச்சு, பழக்கவழக்கங்கள்,
நேர்மை, எல்லோருடனும் பழகும் தன்மை
இவைகளால் எல்லோராலும்
போற்றப்பட்டீர்கள் மதிக்கப்பட்டீர்கள்!
அம்மா உங்கள் கடமைகளை மிகவிரைவில்
முடித்துக்கொண்டு எங்களிடமிருந்து
சென்றுவிட்டீர்களே!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
எங்களுக்கு அம்மாவாக வந்திடுங்கள்
காத்திருப்போம்..
உங்கள் மருமக்கள் வாடுகிறார்கள்,
பேரப்பிள்ளைகளோ அம்மம்மா,
அப்பம்மா போலவொரு
அருந்தெய்வம் இல்லையேன
கண்கலங்கி நிற்கின்றார்
ஆண்டுகள் பத்து ஓடுயதம்மா!
ஆனால் எம்முள் உறைந்து போன நினைவுகள்
உயிருள்ளவரை நீளும்மா!
காலம் உயிர் பிரிந்து
கலங்க வைக்கும் எனினும்
தெய்வமாய் இருந்தெமது
குலம் காக்க வேண்டுமம்மா
இருந்தபோதே எம்மைக்காத்த
காவல் தெய்வமே - இறந்தாலும்
எம்மை இறையாக்காப்பீரே!
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர்
நீங்கள் எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்லபல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
திருப்ப முடியாத காலத்தை
உங்கள் நினைவுகளுடனும்
நிழல்ப்படத்தினூடாகவும்
திரும்பிப்பார்க்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
ஊரெழு, Sri Lanka பிறந்த இடம்
-
Scarborough, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
